Categories
உலக செய்திகள்

மிருகத்தை விட மோசமா நடத்துறாங்க…. தீவிரமாக பரவி வரும் பரிசோதனை முறை…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளையும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளையும் தடை செய்வதற்கான சட்டத்தை பிறப்பிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளும் இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள் கூறியதாவது, தங்களுடைய சொந்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரிலே தற்போது இருக்கும் இளம் பெண்கள் தங்களது கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையை அணுகுகிறார்கள் என்று கூறியுள்ளது.

இதனையடுத்து இவ்வாறு கன்னித்தன்மையை பரிசோதனை செய்த இளம்பெண் ஒருவர் ஸ்கை நியூஸ் சேனலிடம், கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறை என்ற பெயரில் தன்னை மிருகத்தை விட மோசமாக நடத்தியதாக கூறியுள்ளார். இதற்கிடையே பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையையும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளையும் தடை செய்வதற்கான சட்டத்தை பிறப்பிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |