Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ பரிசு தொகையா…. இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்கள்….!!

துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியின் மூலம் 20 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது.

இந்தியாவிலுள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் கார் டிரைவராக பணிபுரிவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த லாட்டரி டிக்கெட் குழுக்களின் முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆவது பரிசாக 3 மில்லியன் திர்ஹாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமராஜன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டினுடைய எண்ணிற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சோமராஜனினுடைய நண்பர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் லாட்டரி டிக்கெட்டில் ஜெயித்த இந்த பணத்தை என்ன செய்வது என்று தன்னுடைய குடும்பத்துடன் கலந்து பேசிய பின்னரே முடிவு செய்வேன் என்றுள்ளார்.

Categories

Tech |