மழையினால் பாழடைந்த வீட்டில் இருந்த பெண் சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்ததை தொடர்ந்து வீடு கட்டி தருவதாக மோசடி செய்த அரசு அலுவலர்களை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகாமையில் உள்ள புருஷோத்தம் குப்பம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் மனைவி அய்யம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவரின் மகன் ராகுல்காந்தி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அய்யம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இவருக்கு ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடுகட்டி கொடுப்பதற்காக கூறி அவர்களிடம் ஆதார் அட்டை, பொதுவிநியோக அட்டை போன்றவற்றை வாங்கியுள்ளனர்.
அதனை வைத்து வீடு கட்டி முடிந்துவிட்டதாக ஏமாற்றி 1,70,000 ரூபாய் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் பாழடைந்த பழைய வீட்டில் அய்யம்மாள் தங்கியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மழை பெய்ததால் அய்யம்மாள் தங்கியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் உடலை எடுக்கவிடாமல் அலுவலகங்களை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.