Categories
உலக செய்திகள்

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் …. திடீரென்று கேட்ட வினோதமான சத்தம்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண் …!!!

 நீர்க்கீரி விலங்கு ஒன்று எதிர்பாராத விதமாக கார் என்ஜின் பெட்டியில் சிக்கிகொண்ட  சம்பவம்  ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் தனது காரை எடின்பர்க்கில் இருக்கும் ஒரு குளத்தை சுற்றி அமைத்துள்ள பார்க்கிங்  இடத்தில் நிறுத்தியிருந்தார் . இவர் தனது  பணிகள் முடிந்ததும் காரை எடுக்க முயற்சித்த போது திடீரென்று வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சத்தம் எங்கிருந்து கேட்கிறது என  கண்டு பிடிக்கமுயன்றுள்ளார் . அதன்பின் இவர் கார் என்ஜின் பெட்டியை சரிபார்க்க முயன்றபோது காரின் பொன்னட்டுக்குள் ஒரு ஸ்காட்ஸ் நீர்க்கீரி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் . இதைக் கண்ட அப்பெண் உடனடியாக விலங்குகளை மீட்கும் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த இடம் வனப்பகுதி என்பதால் குளத்திற்கு வந்த நீர்க்கீரி மனிதர்களின் நடமாட்டத்தை கண்டு காருக்குள் பதுங்கிய போது  சிக்கிக்கொண்டது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த SPCA அதிகாரிகள் டேரன் மற்றும் சாரா இருவரும் காரில்  சிக்கிக்கொண்ட  நீர்க்கீரியை பத்திரமாக மீட்டனர். மேலும் கார்  பொன்னட்டிலிருந்து மீட்கப்பட்ட  நீர்க்கீரிக்கு மருத்துவ உதவி வழங்க  முற்பட்ட போது அந்த விலங்கு மீட்பார்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த நீர்க்கீரி மீட்கப்பட்ட புகைப்படங்களை ஸ்காட்டிஷ் சொசைட்டி தங்களின்  பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது . இதுகுறித்து SPCA  அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ‘இந்த   நீர்க்கீரி கார் பொன்னட்டை ஒரு மறைவிடமாக பயன்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தனர். இதேபோல் கடந்த  ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் தம்பாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் 10 அடி மற்றும் 2 அங்குல அளவு கொண்ட ஒரு பெரிய முதலை ஒன்று மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்த  காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் முதலையை மீட்டு அருகில் உள்ள அலிகேட்டர் பண்ணைக்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |