Categories
உலக செய்திகள்

பார்க்க கிராபிக்ஸ் மாதிரி இருக்குது …. ஆனா ஒரிஜினல்தான் …. வைரலான போட்டோகிராபரின் வீடியோ …!!!

புகைப்படக் கலைஞர் ஒருவர் செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டத்தை வித்தியாசமாக வீடியோ எடுத்த  பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஸ்ரேலில்  யோக்நிம் என்ற பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதை அறிந்த இஸ்ரேலை சேர்ந்த லையோர் பட்டேல்  என்ற புகைப்படக் கலைஞர்  ட்ரோன் கேமராவை பயன்படுத்தி அப்பகுதி முழுவதையும் படம்பிடித்துள்ளார்.

அத்துடன் செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லுவது முதல் தொடங்கி மீண்டும் பண்ணைக்குத்  திரும்புவது வரை படம் எடுத்து அதை  டைம்லாப்ஸ் முறையில் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் செம்மறி ஆடுகள் கூட்டம் கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எரும்பு போல் செல்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |