Categories
தேசிய செய்திகள்

“PARLE-G” 10,000 பேர் வேலை நீக்கம்…. வரி செலுத்த சிரமம்..!!

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பிஸ்கட்களான பார்லே ஜி, manokaa, hide and seek ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும்  பார்லே நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அதன் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் முன்பு பிஸ்கட்டுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது  ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்ட பின் வரியானது 15 சதவீதமாக அதிகரிக்கபட்டதன் காரணமாக விலை அதிகரித்து விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக பார்லே நிறுவனம் கூறியது.

Image result for parle g

கடந்த ஆறு மாத காலமாகவே விற்பனை மந்தமாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. எனவே வரியை மீண்டும் 12 விழுக்காடு அளவிற்கு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பார்லே நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் உற்பத்தியை குறைப்பதுடன், 8000 முதல் 10000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவது தவிர வேறு வழியில்லை என்று பார்லே நிறுவன தலைவர்  மைதீன்ஷா கூறியுள்ளார்.

Categories

Tech |