சாலமன் தீவுகளில் நடந்த கலவரத்தில் நாடாளுமன்றத்தில் நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.
சாலமன் தீவுகள் நாட்டில், மானசே சோகவரே கடந்த 2019-ஆம் வருடத்திலிருந்து பிரதமராக இருக்கிறார். சமீபத்தில் இவர் தைவான் நாட்டுடனான தூதரக உறவை முறித்துவிட்டு சீன நாட்டுடன் தூதரக உறவை உருவாக்கினார். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசு இவ்வாறு தீர்மானித்ததை, நாட்டின் பல மாகாணங்கள் ஏற்கவில்லை.
இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தலைநகர் ஹோனியாராவில் இருக்கும் நாடாளுமன்றத்தின் முன்பு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது, காவல்துறையினர் அவர்களை விரட்டியடிக்க முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் அருகே இருந்த காவல் நிலையத்திற்கு நெருப்பு வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.