மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகின்றது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனுவை தாக்கல் செய்து வந்தனர். பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் நூதனமான முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.இந்நிலையில் மக்களவை மற்றும் 18 சட்ட பேரவை இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகமான வேட்புமனு தாக்கல் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது . சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையில் அமமுக வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.