ஜெயிலில் பரோலில் சென்ற கைதி தலைமறைவாக இருப்பதனால் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியங்குளம் பகுதியில் வேலு என்ற வேல்முருகன் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பரோல் கேட்டு விண்ணப்பத்ததால் 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின் கடந்த 15-ஆம் தேதி ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற அவர் மீண்டும் வராமல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் தலைமறைவாக இருக்கின்ற வேல்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். இதனைதொடர்ந்து வேல்முருகன் ஜெயிலுக்கு திரும்பியபோது அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஜெயிலில் இருந்து சென்றவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.