தூத்துக்குடியில் புதிய உணவகம் ஒன்று 27 பரோட்டா 1 சிக்கன் ரைஸ் பலூடா போன்றவற்றை ஒரே நேரத்தில் வேகமாக சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசு என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஐபி பிரியாணி கடையில் கடந்த சில நாட்களாக பரோட்டா திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடைக்கு சாப்பிட வருபவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். போட்டியில் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு முடித்தால் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகிறார்கள். சாப்பிட்டதற்கு பணம் தேவை இல்லை. மாறாக தோற்றுவிட்டால் சாப்பிட்ட உணவிற்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் பூபாலன் ராயபுரம், அதேபகுதியை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் உணவுகளை சாப்பிட்டு முடித்து வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் பரோட்டா திருவிழாவை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறியுள்ளார்.