Categories
தேசிய செய்திகள்

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் அவ்வளவு தான்… எத்தனை ஆண்டு சிறை தெரியுமா?

கிளி மற்றும் லங்கூரை வளர்த்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொதுவாக நாய் பூனை போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்ப்பார்கள். சில இடங்களில் கிளி, லவ் பேர்ட்ஸ், புறா போன்றவற்றில் வளர்ப்பார்கள். ஆனால் சிலர் குரங்குகளை வளர்ப்பதற்காக வைத்திருப்பார்கள் ஆனால் தற்போது கான்பூர் வனச்சரகம்  கிளி மற்றும் குரங்கு வகைகளில் ஒன்றான லங்கூர் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. கிளியையும் லங்கூரையும் பிடித்து கூண்டில் அடைப்பது விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இந்த இரண்டையும் பிடிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது  25 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் சமூக வனவியல் பிரிவு இயக்குனர் அரவிந்த்குமார் யாதவ் உத்தரவு வெளியிட்டுள்ளார். அதன்படி லங்கூர் மற்றும் கிளியை பிடித்தாலோ அல்லது கூண்டில் அடைத்து வைத்தாலோ அவர்கள் மீது 1972 ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் இரண்டு தண்டனையும் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |