Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் ஷெட்டுக்குள் இதுவா இருக்கு…? பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சி….!!

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கார் ஷெட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில். தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது அது பணிமனையை ஒட்டியிருந்த உறை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதன்பின் தீயணைப்புத்துறையினர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுள்ளனர்.

Categories

Tech |