பிக்பாஸ் சீசன் 5ல் பிரபல அழகு கலை நிபுணர் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது ஆவலாக உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் இந்த நிகழ்ச்சியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் யாரெல்லாம் உறுதியாக பங்கேற்க போகிறார்கள் என்பது அக்டோபர் 3ஆம் தேதி தான் நமக்கு தெரியவரும். இப்போதைய நிலவரப்படி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி கனி, ஷகிலா மகள் மிலா, நிழல்கள் ரவி, நடிகை பிரியாராமன் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறுதியாக கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து இன்னொருவரின் பெயரும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. அவர் யார் என்றால் சென்னையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் ரேணுகா பிரவீன் தான். இவர் பல பிரபலங்களுக்கு அழகு சேவை செய்துள்ளார்.