மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், இதுவரையில் திமுகவுக்கு, அதிமுகவுக்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப் போவது ? பரம்பரை சண்டை. இரண்டு, கட்சிகளையும் அழித்துவிட்டு, திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு உள்ளே வர நினைக்கிறவர்கள்.
எத்தனை வன்முறைகளை கையில் எடுத்திருக்கிறார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள்… கோவையிலே இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் தளபதி அவர்களுடைய சுவரொட்டிகளை கிழித்திருக்கிறார்கள். நடப்பது நம்முடைய ஆட்சி. ஆனால் இரவு ஒன்றரை மணிக்கு அத்தனை பெரிய வன்முறையிலே அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
எப்படி நம்முடைய தளபதி அவர்களுடைய சுவரொட்டிகளை அவர்கள் கிழித்தெறியலாம் ? அதற்கு எப்படி அங்கே பார்வையாளர்களாக காவல்துறை இருக்கலாம் ? என்பது தலைமை வரைக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காகவே நான் இந்த கூட்டத்திலே சொல்கிறேன்.
அண்ணாமலை என்கின்ற மனிதர் பேசுவதெல்லாம் பொய்யாக இருக்கிறது. சின்ன சின்ன செய்தியிலிருந்து, பெரிய செய்தி வரைக்கும் அத்தனையும் பொய்யாக இருக்கிறது. தேசிய கொடிய பறக்க விடுவதில் எங்களுக்கு ஒன்றும் கடினமில்லை. ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலேயே முதலில் தேசிய கொடியை பறக்கிறதா ? என்று பாருங்கள்.
தேசிய கொடி கைத்தறியில் இருக்கட்டும், அல்லது கதறில் இருக்கட்டும், எதற்காக பாலிஸ்டர் துணியில் இருக்க வேண்டும் ? பாலிஸ்டர் துணியில் பறந்தால்தான் அதானியின் வீட்டில் செல்வம் கொடி கட்டு பறக்கும் என்பது தானே உண்மை என விமர்சித்தார்.