சத்துக்கள் நிறைந்த துவரம்பருப்பு ரசம் மிகவும் எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
வேக வைத்து மசித்த துவரம்பருப்பு தண்ணீர் – 1 கப்
தக்காளி சாறு – 1/4 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
மிளகாய் – 1/4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு,மிளகு ,மிளகாய் ஆகியவற்றை அரைத்துக்கொள்ள வேண்டும் .பின்னர் பருப்புத் தண்ணீருடன் தக்காளி சாறு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், அரைத்த பொடிசேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, இறக்கி நெய்யில் கடுகு தாளித்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் மனம் மயக்கும் துவரம்பருப்பு ரசம் தயார் !!!.