பருவநிலை உச்சி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த பங்கேற்றுள்ளனர்.
உலக அளவில் பருவநிலை உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றுவரும் அந்த வகையில் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உச்சி மாநாட்டில் அமீரகத்தை சேர்ந்த துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கலந்துடுகொண்டார். இம்மாநாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக சந்தித்துவரும் பிரச்சனைகள் குறித்து அனைவரும் உரையாற்றினர். இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து நரேந்திர மோடி 2030 ஆண்டுக்குள் நிலை மாற்றம் குறித்த சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம் என்று கூறினார்.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2030ஆம் ஆண்டுக்குள் 50 % கார்பன் உமிழ்தலை குறைப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமீரக அரசு பருவநிலை மாற்றத்தில் காலநிலை நடவடிக்கைகளில் பங்கு உறுதியாக காணப்படும் என்று அரசு தரப்பில் கூறியுள்ளனர்.