பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பாக எகிப்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள கிளாஸ்கோவில் COP26 என்று அழைக்கப்படும் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டின் இறுதி நாளில் அடுத்த மாநாடானது எங்கு நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பருவநிலை மாற்ற மாநாடானது அடுத்த ஆண்டு Sharm El-Sheikh ல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எகிப்து சுற்றுச்சுழல் துறை அமைச்சரான Yasmine Fouad தெரிவித்துள்ளார். மேலும் பருவநிலை மாற்றத்தை சீர்படுத்த சர்வதேச நாடுகளில் நிதி உதவி, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நஷ்டஈடு மற்றும் சேதங்கள் போன்றவை அந்த மாநாட்டின் முக்கியக் கருத்துக்களாக இருக்கும் என்றும் எகிப்து சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.