பருவநிலை மாற்றத்தினால் சுமார் மூன்று மில்லியன் நகரங்கள் நீரில் மூழ்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகம் பேரழிவை சந்திக்கக்கூடும். மேலும் துருவ பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும். இதன் காரணமாக கடலோர பகுதிகள் மற்றும் உள்நாடுகளில் அமைந்துள்ள சில நகரங்கள் நிரந்தரமாக வெள்ளத்தினால் மூழ்கும். இது குறித்து காமா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவர்கள் அளித்த தரவுகளின்படி, வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்ட சில வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பீதியை உண்டாக்கும் விதமாக உள்ளது. அதிலும் வெள்ளத்தில் ஒவ்வொரு பத்து வீட்டிற்கு ஒரு வீடு என்னும் விகிதத்தில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விகிதம் சில மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மோசமாக காணப்படுகிறது. இதனை அடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்கு பின்னர் கிரேட் யார்மவுத்தில் இருக்கும் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதனை தொடர்ந்து போர்ட்ஸ்மவுத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்கள் நீரில் மூழ்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளம் மட்டுமே கவலைக்கான காரணம் கிடையாது.
அதிலும் பருவநிலை மாற்றத்தினால் வெப்பமான சூழல் வறண்ட கோடை காலத்தை ஏற்படுத்தும். இது கட்டுமான பொருட்களில் ஒழுங்கற்ற பிளவை உண்டாகும். இது கட்டிடங்களின் அமைப்புகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தும். இதற்கிடையில் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள COP26 காலநிலை மாற்ற மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளனர்.