Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாநாடு” இதற்காக உறுதி எடுத்த தலைவர்கள்…. இந்தியா கையெழுத்திட மறுப்பு….!!

காடுகள் அழிப்புக்கு எதிரான கிளாஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு குறித்து இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டது. ஆனால் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆகவே பிரகடனத்தின் இறுதி வடிவத்தில், காடுகள் அழிப்பு விவகாரத்தை வர்த்தக நடவடிக்கைகளுடன் முடிச்சு போடும் வாசகங்கள் இருந்ததால் இந்தியா அதிருப்தி அடைந்து கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |