உலக வெப்பமாதலை தடுப்பதற்காக நியூஸிலாந்து புதிய வழிமுறைகளை பின்பற்றுமாறு அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் உலக வெப்பமாதலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடை பெற்றபோது அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி என 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த மாநாட்டில் பருவ நிலை மாறுபாடு காரணமாக அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி அவர்களின் கருத்துக்களை கூறினார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காக கார்பன் உமில்தலை குறைப்பதற்கான நியூசிலாந்தின் புதிய வழிமுறைகளை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றலாம் கூறியுள்ளார்.
அதாவது கார்பன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் காலநிலை தொடர்பாக பின்பற்றப்படும் நிதி வெளிப்பாடுகளை உறுதியாக்கவும் புதை படிமை எரிபொருள்களின் மானியங்களை முடிவுக்கு கொண்டு வரவும் உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.