ஆப்கான் மக்களுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக கடும் பசி பட்டினியால் வாடும் ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்தியா அனுப்பி வைக்கும் உதவிப் பொருட்களுக்கு சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக முதலில் இந்திய சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதனையடுத்து புதிய அறிவிப்பு ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதன்படி இந்திய உதவிப் பொருட்கள் ஆப்கான் வாகனங்களில் ஏற்றி பாகிஸ்தானைக் கடந்து செல்ல அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லி வந்துள்ள ஐரோப்பிய யூனியனின் சிறப்பு தூதர், இந்திய வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து காபூலுக்கு 300 கிலோ மதிப்புடைய உதவிப் பொருட்களை அனுப்பிவைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.