ஆபத்தான குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு குட்டை இருக்கின்றது. இந்நிலையில் பாசிபடர்ந்து காணப்படும் இந்த குட்டையில் மக்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
மேலும் ஆபத்தை விளைவிக்கும் இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ஆபத்தான இந்த குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு, சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.