Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு சம்பளம் தரவே இல்லை” இருப்பிடம் இன்றி தவித்த தொழிலாளர்கள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

வெளிமாநில தொழிலாளர்கள் உணவு மற்றும் இருப்பிடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும் மற்றும் தங்குவதற்கான இட வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதால் உணவின்றி அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகின்றது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த சமூக சேவை அமைப்பினர் கோட்டாட்சியர் மூலமாக தொழிலாளர் நலத் துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கலெக்டரின் கவனத்திற்கு இவை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன் பிறகு அவரின் உத்தரவின்படி தாசில்தார் ரவி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதில் கம்பெனியின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதாகவும் அவரை வரவழைத்து முழுமையான விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழிலாளிகளுக்கு தேவைப்படும் உணவிற்கு ஏற்பாடுகள் அனைத்தையும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |