Categories
மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய சேவைகளில் பணியாற்றுபவர்களுக்கு “பாஸ்” – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளுக்கு ‘பாஸ்’ பெற்றுகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதாவது பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதாரம், மருத்துவ சேவைகளில் ஈடுபடுவோர் மற்றும் வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி புரிவோர் ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தலைமை அலுவலகம், 4 மண்டல அலுவலகங்களில் ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |