Categories
தேசிய செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பண்டிகை கால தள்ளுபடி…. ரயில் ரெசிபி அசத்தல் அறிவிப்பு….!!!!

ரயில் ரெசிபி என்ற உணவு விநியோகம் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 50% சிறப்பு விழா கால சலுகை அறிவித்துள்ளது. இந்த விழா கால சலுகையானது அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள பயனாளர்கள் ரயில் ரெசிப்பியின் இணையதளம் அல்லது செயலி பதிவிறக்கம் செய்தோ அல்லது 844-844-0386 என்ற எண்ணில் அழைத்தோ வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உணவுப்பொருட்களை ஆர்டர் செய்யும் முறைகளையும் எளிமைப்படுத்தி இருக்கிறதாம். ரயில் பயணிகள் எங்களிடம் உணவை ஆர்டர் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில், சுவையான உணவு கிடைப்பதற்கான அனைத்து பொறுப்புகளையும் நாங்கள் ஏற்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் ரயில் ரெசிபி நிறுவனர் 650-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், 6000க்கும் மேற்பட்ட ரயில்களில் உணவு விநியோகம் செய்து வருகிறது. சுத்தமான ஜெயின் உணவு, மார்வாடி உணவு என எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் என்று கூறப்படுகிறது

Categories

Tech |