அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி, விமான பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், நியூயார்க் மாகாணத்தின் விமான நிலையத்திலிருந்து, கலிஃபோர்னியா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் முன், அனைத்து பயணிகளும், முகக்கவசம் அணியுமாறு விமான ஊழியர்கள் அறிவித்தனர். அதன் பின்பு, விமானம் புறப்பட்டது.
ஆனால், அதில் ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. எனவே, விமான பணிப்பெண் ஒருவர் சிரித்த முகத்தோடு பணிவாக அவரிடம் முகக்கவசம் அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் திடீரென்று பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்தி விட்டார்.
A flight from New York City to Southern California made an emergency landing in Denver Wednesday night after a passenger allegedly punched a flight attendant twice, breaking bones in her face.
American Airlines CEO says it’s one of the worst acts of unruly behavior he’s seen. pic.twitter.com/lwBbp8MlVp
— CBS Evening News (@CBSEveningNews) October 29, 2021
மேலும், தொடர்ந்து மீண்டும் ஒரு முறை குத்தியிருக்கிறார். இதனால், அவரின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. எனவே, பிற பயணிகள் அந்த நபரை பிடித்து அவரின் கைகளை டேப் வைத்து கட்டியுள்ளனர். அதன்பின்பு விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலையத்திற்கு அவசரமாக தகவல் தெரிவித்த விமானி, விமானத்தை தரையிறக்கினார். இதனையடுத்து, அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.