Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் அச்சுறுத்தல்… நான்காவது முறையாக மீண்டும் தடை… பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் விமானமானது ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த மாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேசிய அவசரம், நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம், அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் அந்த பத்து நாட்கள் தடையானது நீட்டிப்பு செய்யப்படுவதாக டிராவல் ஏஜென்சிகள் மற்றும் அமீரக விமான நிறுவனங்கள் இணையதளத்தில் இந்த மாதம் அறிவித்திருந்தன.

அதன்படி மே 5-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை அமீரகத்தின் எந்த பகுதிக்கும் பயணிகள் விமானமானது இயங்காது என்று நான்காவது முறையாக தற்போது எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் குறையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமிரேட்ஸ், துபாய் நிறுவனத்தின் சார்பில் அமீரகம் வருவதற்கு இந்தியாவிலிருந்து முன்பதிவு செய்துள்ள தேதிகளை பயணிகள் மாற்றியமைத்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |