சைப்ரஸ் நாட்டிலிருந்து, புறப்பட்ட விமானமானது, ஆஸ்திரியா வழியே சென்ற போது அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சைப்ரஸ் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் பயணிகள் விமானமானது, சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விமானம் ஆஸ்திரிய Graz விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய பயணி ஒருவர், விமானம் புறப்பட்டவுடன் கழிப்பறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று விமானி தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், ஆஸ்திரியாவின் காவல்துறையினர் அந்த பயணியை அழைத்துச் சென்று, அவரை பரிசோதித்ததோடு, அந்த விமானத்தின் கழிவறையையும் சோதித்துள்ளார்கள். எனினும் அங்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பயணி, காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைத்திருக்கிறார். ஆனால், எதற்காக கழிப்பறையில் சென்று உள்பக்கமாக பூட்டினார்? என்று அவர் கூறவேயில்லை. அதன்பின்பு விமானம் புறப்பட்டது. ஆனால் அந்த பயணியை ரயிலில் அனுப்பியதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.