தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது 2020 ஜனவரி வரையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசிய 1, 84, 773 பயணிகளிடம், 4 கோடியே 1 லட்சத்து 74 ஆயிரத்து 880 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.