Categories
உலக செய்திகள்

வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு..!

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாதாரண காலகட்டத்தில் அரை மணி நேரத்தில் பயணிகள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தற்போது கொரோனா  காலகட்டம் நிலவி வருவதால் கடந்த சில வாரங்களாக பயணிகளின் ஆவணங்கள் விரிவாக சரி பார்க்கப்படுவதால் தாமதமாகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் பயணிகள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளாலும் மேலும் தாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் சுவிட்சர்லாந்தில் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த பயணிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |