Categories
கல்வி தேசிய செய்திகள்

JEE‌ 2023: ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ முதல் நிலை தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை பெறப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்பிறகு 2023-ம் ஆண்டில் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகள் மாற்றப் படவில்லை. கடந்த வருடம் இருந்த அதே விதிமுறைகள் தான் அடுத்த ஆண்டும் பின்பற்றப்படும். ஆனால் ஐஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலை தேசிய தேர்வு முகமை மாற்றியுள்ளது. அதன்படி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, மாணவர்கள் 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 12-ம் வகுப்பில் 75% தேர்ச்சியை தான் தேசிய தேர்வு முகமை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது.

Categories

Tech |