போராட்டக்காரர்களுக்கு பாஸ்போர்ட் , அரசு வேலை வழங்கப்படாது என்று உச்சநீதிமன்ற பொதுநல வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய விவசாயிகள் போராடி வருகின்றனர். அதனை கலைப்பதற்காக அரசும், காவல் துறை அதிகாரிகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கறிஞரும் ,ஆர்வலருமான பிரசாத் பூஷன் இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்ற உத்ரகண்ட் போலீசார் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி போராட்டக்காரர்களுக்கு அரசு வேலையும் கிடைக்காது என்று பீகார் அரசு கூறியுள்ளது. பாஜக இந்து ரஷ்யாவை மட்டுமல்லாமல், நாஜி ஜெர்மனியை போல ஒரு போலீஸ் அரசை உருவாக்க விரும்புகிறது என்று விமர்சித்துள்ளார்.
Shockingly perverse! Uttarakhand police says that passports won't be issued to people who post on social media against Govt! Bihar govt says that protestors will not be given govt jobs!
The BJP wants not merely a Hindu Rashtra, but a police state like in Nazi Germany— Prashant Bhushan (@pbhushan1) February 4, 2021