எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் 40 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 ஆண் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது , தேர்தல் நடைபெறும் நேரத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பறக்கும் படையா அல்ல பணம் பறிக்கும் படையா?என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சீமான் , மளிகை கடை செல்லுபவர்கள் , ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பிடிக்கும் இவர்கள் பணம் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளை மட்டும் பிடிக்க மாட்டார்கள். இவர்களை பறிக்கும் படை என்று தானே சொல்ல வேண்டும் என்று விமர்சித்தார். “நான் உங்களிடம் ஓட்டு கேட்கப் போவதில்லை , எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள் , இல்லாவிட்டால் போங்கள்” ஆனால் நான் நாட்டுக்காக பேராட வேண்டியது என்னுடைய கடமை. அந்த கடமை எனக்கு உள்ளது.காரணம் இந்த நாட்டின் மீது எனக்கு பேரன்பு உண்டு என்று சீமான் கூறினார்.