Categories
உலக செய்திகள்

‘பட்டாசு வெடிக்க தடை’…. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்…. கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு….!!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற விழா நாட்களில் மட்டும் இரண்டு மணி நேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க மேற்குவங்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் விழாக்காலங்களில் பட்டாசு வெடிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணை அக்டோபர் 29ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை அடுத்து நீதிமன்றம், கொரோனா தொற்று பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கருத்தில் கொண்டு அனைத்து விழாக்காலங்களிலும் பசுமை பட்டாசு உட்பட அனைத்து பட்டாசுகளையும் விற்பனை செய்யவோ வெடிக்கவோ கூடாது என்று  கொல்கத்தா நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து கொல்கத்தா நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில்  வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கன்கவில்கர் தலைமையிலான சிறப்பு குழு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது “நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரும்பாலான பகுதிகளில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் காற்றின் தரம் சரியாக உள்ள பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம். மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |