சாலையில் நடந்து செல்லும் ஒரு பசுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சாலையில் ஒரு பசு வளைந்து நெளிந்து நடப்பது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 27 ஆயிரம் நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.மேலும் 2,800 முறைகளுக்கு மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில், பசுக்கள் ஒன்றாக சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பசு மட்டும் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது.
அதை பார்ப்பதற்கு ஃபேஷன் ஷோவில் மாடல்கள் நடந்துவருவதை போன்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதன்முதலில் இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்தது. அதற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ஒரு பயனாளர், அந்த பசுவைப் பார்த்து நவோமி காம்பெல் என்று வர்ணித்துள்ளார். நவோமி காம்பெல் என்பவர் மாடலிங் செய்து வரும் ஒரு பெண். மேலும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பசுவை புகழ்ந்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
ทำไมเราต้องมานั่งขำอะไรแบบนี้ด้วยเนี่ย 5555555555555555 pic.twitter.com/peMruwBSm4
— 🧸⁷ (@emesspace) February 22, 2021