Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழிமுறைகள்..!!

பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு:

செருப்பு இல்லாமல் நடப்பதை சுத்தமாக தவிர்த்திடுங்கள், அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடாக இருக்கும் சாலைகளில் செல்லும் பொழுது காலணி ரொம்ப முக்கியம், அவ்வாறு  அணியாமல் சென்றால் சாலைகளில் இருக்கும் ஜல்லிகற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்களின்  பாதத்தில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடும்.

வாரத்தில் ஒரு முறை உங்கள் பாதத்தை தூய்மையாக வைப்பதற்கு, நகங்களை வெட்டவேண்டும்.  நகங்களின் கீழ்ப்பகுதில் இருக்கும் இடங்களில் அழுக்கு அண்டாமல்  பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக செய்யுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் என்று கூறலாம்.

மிக நீளமாக வளரும் நகங்கள் உள்நோக்கியும் வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களையும்  ஏற்படுத்தலாம், நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டுங்கள்,அப்போதுதான் நகங்களில்  காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் வெட்டலாம்.

உங்கள் பாதங்களின் பின் பகுதியை  உங்களால் எளிதில் பார்க்க முடியாது, அதனால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு, புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் இருக்கிறதா, என்றும் கூட  அடிக்கடி பரிசோதியுங்கள்.  வருமுன் காக்கும் முறைகளில் ஒன்றாகும்.

படுக்கைக்கு செல்லும் முன்பு  அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

நீங்கள் நடக்கும் போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் உங்கள் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் காலணி  அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.

நல்ல காற்றோட்டம் இருக்கும்  செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்கள் ஏற்பட விடாமல் தடுக்கும். இதை தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும். அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்த்து விடலாம்.

Categories

Tech |