இந்திய அமைதி காக்கும் படையினர் 135 பேர் தெற்கு சூடானில் சிறப்பான சேவை ஆற்றியதால், ஐ.நா பதக்கத்தை வென்றுள்ளார்கள்.
தெற்கு சூடானிலிருக்கும் ஜொங்லீ மாநிலத்திலும், பிபோர் நிர்வாக பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிய 135 இந்திய அமைதி காக்கும் படையினருக்கும், 103 இலங்கையை சார்ந்தவர்களுக்கும் ஐ.நா பதக்கம் கிடைத்துள்ளது. இந்த அறிக்கையை தென் சூடானிலிருக்கும் ஐ.நா மிஷனான யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமைதிகாக்கும் பணியின் படைத்தளபதி கூறியதாவது, யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்யினுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தையும் பொருட்படுத்தாமல், இந்த அலுவலர்கள் செய்த சேவையை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மிகவும் சங்கடமான சூழ்நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள் என்று இலங்கை நாட்டின் விமானத்தை சார்ந்த தினாய்கர் கூறியுள்ளார்.