Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து விசாரணை ….!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 939,279 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 10-ம் தேதி அறிவித்தது. இந்த பட்டியலில் 5175 பேரின் முடிவுகள் விடுப்பட்டுள்ள நிலையில் 100% தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 77 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்ததாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்தது. இவர்களில் 231 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் 658 பேர் இடைநிற்றல் மாணவர்கள் என்றும், 4359 பேர்  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பள்ளிக்கு வராத மாணவர்கள் இறந்தவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கப்பட்டது. எப்படி என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு தேர்வுகள் துறைக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஜார்ஜ் தாமஸ் வைத்தியம் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |