பனையின் சிறப்புகளை ஒன்று இந்த பதநீரும் ஆகும். பனையில் இருந்து கிடைக்க கூடிய ருசி மிகுந்த பானம் பதநீர். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரித்து அதை பருகினால் அப்பப்பா அதனையொரு ருசி, புத்துணர்ச்சி.
உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கத்தை கொடுக்கும். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு சிறந்த பானம். கோடை காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் உண்டாகும் வலிகள் அனைத்தையும் குணப்படுத்தும்.
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்..
சுண்ணாம்பு சேர்ந்திருப்பதால், நம் உடம்புக்குத் தேவையான கால்சியம் எளிதில் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
பதநீரை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் சரியாகும். பெண்களைப் பாடாய்படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் நல்ல மருந்து.
உடலுக்குக் குளிர்ச்சியை அழிக்கும். கழிவு அகற்றியாகவும், வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தி விடும்.
வெந்தயம் 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடியாக்கி, காலை,மாலை என இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி குடித்து வந்தால் இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.
மஞ்சளை பொடியாக்கி அரை தேக்கரண்டி காலையில், இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொண்டால், வயிற்றில் இருக்கும் புண், தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் அனைத்தும் ஓடிவிடும்.