அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணிற்கு செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அமெரிக்க தொழிலாளர் நலத்துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் சுமார் 15 ஆண்டுகாலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புடைய வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தேசிய ஜனநாயக குழுவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும் வகித்துள்ளார்.
இந்நிலையில் இவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பிற்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி இவருக்கு இந்த பதவியை கொடுப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்துள்ளது. அவ்வாறு நடைபெற்ற வாக்கெடுப்பின் படி சுமார் 53 வாக்குகளை பெற்று சீமா நந்தா வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீமா நந்தாவிற்கு அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பை வழங்குவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதால் அவரது பொறுப்பு நியமனம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.