துனிசியாவில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களை முன்னிட்டு ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
துனிசிய நாட்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் துனிசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிசிய நாடு. முழுவதும் ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் துனிசியாவின் ஜனாதிபதி அந்நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு மட்டுமின்றி சுமார் 30 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை நிறுத்தி வைத்துள்ளார்.