ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் பெய்த பலத்த கன மழையால் இந்திரவதி, மேலம்ஷி ஆகிய ஆறுகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்மதி மாகாணத்திலுள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட தொடர் கனமழை மற்றும் மலைப்பகுதியில் நிலச்சரிவு காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.இதையடுத்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.