Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாதியில் நின்ற ஐபில் போட்டியால்…சுமார் 2,500 கோடி ரூபாய் இழப்பு -பிசிசிஐ தகவல் …!!!

உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த முடியவில்லை என்றால், சுமார் 2,500கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இதனால் உலக  கோப்பை டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பாக மீதமுள்ள 31 போட்டிகளை நடத்துவதற்கான, கால இடைவெளியை உருவாக்கவும், இது தொடர்பாக அனைத்து நாட்டு கிரிக்கெட்  வாரியங்களுடனும்  இணைந்து பேசி செயல்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |