Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அதிகாரிகளின் அறிவுரை….!!

கனமழையினால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப் பாதையில் காக்காம்பாடி கிராமம் அருகே சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால்  சுமார் 1 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பக்கமாக சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |