Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணக்கில் வராத பணம்….. பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர் ஜோதி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கணக்கில் வராத 38,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |