Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மகாராணியின் தலைமை”… கனடா இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது…? கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்…!!

கனட பத்திரிக்கையாளர் ஹரி -மேகன் பேட்டியை பார்த்த பிறகு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் லூக் சாவேஜ் என்ற பத்திரிக்கையாளர் வசித்து வருகிறார் . இவர் Jacobin Magazine என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது . அந்த பேட்டியை பார்த்த பின்பு லூக் சாவேஜ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ,  கனடாவின் தலைவர் யார் என்று கனடா குடிமக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. 75% பேருக்கு அதற்கு பதில் தெரியவில்லை.

பிரிட்டன்  ராஜ குடும்பத்தின் மகாராணியார் தான் அதற்கான பதில். இதற்கிடையில்  ஹரி – மேகனின் அந்தப் பேட்டிக்கு முன்பே நடத்தப்பட்ட ஆய்வில் 45 % பேர் மகாராணியின் தலைமை வேண்டாம். அதற்கு பதிலாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் கனடாவின் தலைவராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அரச குடும்பத்தை சேர்ந்த ஹரியும் அவரது மனைவி மேகனுமே மகாராணியாரின்  தலைமை தங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டனர்.  இந்நிலையில் கனடா இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |