Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்”… நேரில் பார்த்த சமையல்கார பெண்ணிற்கு நடந்த கொடூரம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற  ஹெர் மைன்ஸ்  என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் செய்து வருகிறார். இங்கு திசையன்விளை பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாக சமையல் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காப்பகத்தின் நிர்வாகி ஜோசப் ஈஸிதோர்-க்கும் அங்கு வேலை செய்யும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் இடையே  தகாத உறவு இருந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி காப்பகத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்ததை எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் பார்த்துள்ளார். அதனால்  ஜோசப்பும் ஜெயலட்சுமியும்  சேர்ந்து ராஜம்மாள் மீது கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட ராஜம்மாள் காப்பகத்திலிருந்து  தப்பி ஓடி வந்து ராதாபுரம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாதிரியார் ஜோசப் ஈஸிதோர் ஜெயலட்சுமியுடன் தனிமையில்  இருந்ததை பார்த்ததால் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், காப்பகத்தில் வசிக்கும் முதிய பெண்களிடம் ஜோசப் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும்  கூறினார். மேலும் தன் வறுமை காரணமாகவே இதனை சகித்துக் கொண்டு இவ்வளவு நாள் அங்கு வேலை செய்ததாக ராஜம்மாள் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பாதிரியார் ஜோசப் ஈஸிதோர் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |