டுவிட்டரில் வெளியான கண்டன முழக்கங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக எலான் மஸ்க் தனது வரி தொடர்பான பதிவை அதில் வெளியிட்டுள்ளார்.
உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
இவருக்கு எதிராக சிலர் சமூகவலைதளத்தில் எலான் மஸ்க் சரியாக வருமான வரியை செலுத்துவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் எலான் மஸ்க் தான் நடப்பாண்டில் மட்டும் 83,000 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.