Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யப்பட்ட விவரம்.. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்… காவல்துறையினரின் கண்காணிப்பு பணி…

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மங்களாபுரம், கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், அச்சன்புதூர், மாவடிக்கால் சேர்ந்தமரம் போன்ற பகுதிகளில் சோதனை சாவடியை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   இதனையடுத்து காவல்துறையினர் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்து பின்னர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 24 மணி நேரமும் இந்த சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |