அசுரன் படத்தில் நடித்திருந்த நடிகர் டீஜே சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
#Asuran fame @Iamteejaymelody joins #PathuThala in a new avatar watch out… Happy Birthday Bro 🥳 Welcome @kegvraja @NehaGnanavel @nameis_krishna @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar @DoneChannel1 @SureshChandraa pic.twitter.com/pUPcQxxy1E
— Studio Green (@StudioGreen2) January 6, 2021
இந்நிலையில் பத்து தல படத்தில் அசுரன் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . அசுரன் படத்தில் வேல்முருகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலம் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு இந்த அறிவிப்பு போஸ்டரையும் ‘பத்து தல’ படக் குழு வெளியிட்டுள்ளது . மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தீஜே அருணாசலத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.